“வாட்சுக்கு தேசப்பற்று என்றவர் ‘சுதந்திரக் காற்று’ என உருட்டாமல் இருந்தால் சரி!” - செந்தில் பாலாஜி சூசகம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “வாட்சுக்கு தேசப்பற்று என்று கூறியவர், சுதந்திரக் காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் 29-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் தொடர்பாக சூசகமகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "கடந்த 10-ம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்புக் கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று தெரிவித்து இருந்தார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜன.17) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in