

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் 13 பேருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் நாளிதழ் அலுவலகம் ஒன்றில் கடந்த 9.5.2007-ல் பெட் ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் போலீஸா ரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இதேபோல், சம்பவத் தில் உயிரிழந்த வினோத் என்பவரின் தாயார் பூங்கொடி, அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விசாரணையை இழுத்தடித்த தால் அட்டாக் பாண்டியின் கூட்டாளி கள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டது. இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோரை சிபிஐ தேடி வருகிறது.
இந்நிலையில், இரு மனுக்களும் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலைய ரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ மேல் முறையீடு மற்றும் சீராய்வு மனுவில் எதிரிகள் பலருக்கு இன்னும் நோட் டீஸ் செல்லவில்லை என தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து சிபிஐ மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க 3 முதல் 7 வரையிலான எதிரிகளுக்கும், பூங்கொடியின் சீராய்வு மனுவுக்கு பதிலளிக்க 3 முதல் 12 மற்றும் 14 முதல் 16 எதிரிகளுக்கும் என மொத்தம் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை ஜன.25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.