அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும்: அதிமுக குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன்
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ளது எம்ஜிஆர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்ஜிஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர் எம்ஜிஆர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளர். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர்.

அதிமுக துண்டு, துண்டாக பிரிந்துள்ளது குறித்து ஆளுநராக அரசியல் கருத்து கூறக் கூடாது. எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சி நடத்தி வந்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து" இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in