அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன்.

உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்." என முதல்வர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in