Published : 17 Jan 2023 06:35 AM
Last Updated : 17 Jan 2023 06:35 AM

‘தி இந்து’ குழுமத்தின் வெளியீடான ‘சுப்பிரமணிய பாரதி - ரைட்டிங்ஸ் இன் தி இந்து’: சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனை

சென்னை: ‘தி இந்து’ குழுமம் வெளியிட்டுள்ள ‘சுப்பிரமணிய பாரதி - ரைட்டிங்ஸ் இன் தி இந்து’ என்ற புத்தகம், சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘தி இந்து’ குழுமம் வெளியிட்டுள்ள ‘சுப்பிரமணிய பாரதி - ரைட்டிங்ஸ் இன் தி இந்து’ (Subramania Bharathi – Writings in THE HINDU) என்ற புத்தகம், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும்புத்தகக் காட்சியில் உள்ள ‘தி இந்து’ புத்தக ஸ்டால் எண். எஃப் 61-ல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் கெட்டியான அட்டை (Hardbound) மற்றும் மாணவர்களை சென்று அடையும் நோக்கில் சாதாரண அட்டையுடன் (Paperback) தயாரிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியம்மிக்க ‘தி இந்து’ நாளிதழில் அந்த காலத்தில் பாரதியார் எழுதிய கட்டுரைகளை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. ஆ.இரா.வேங்கடாசலபதி இப்புத்தகத்தை தொகுத்துள்ளதோடு, இதில் இடம்பெற்றுள்ள படைப்புகளுக்கான சிறப்பு குறிப்புகளையும் சேர்த்துள்ளார்.

இப்புத்தகம் மகாகவி பாரதியார் குறித்த நமது அறிவை மேலும் விரிவடையச் செய்வதோடு, புதுச்சேரியில் தங்கி இருந்தபோது பாரதியார் தனது அரசியல் கருத்துகளை வெளிப்படுத்த ‘தி இந்து’ நாளிதழ் ஒரு தளமாக விளங்கியதையும் உணர்த்துகிறது.

கெட்டியான அட்டை கொண்ட புத்தகத்தின் விலை ரூ.499. சாதாரண அட்டை கொண்ட புத்தகத்தின் விலை ரூ.299. இப்புத்தகத்தை ‘தி இந்து’ புக் ஸ்டாலில் 10 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம். கூடுதல்தகவல்கள் மற்றும் மொத்தமாக வாங்க (பல்க் புக்கிங்) 9843131323 (பாக்கியராஜ்)அல்லது 1800 102 1878 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்புத்தகத்தை https://publications.thehindugroup.com/bookstore என்ற இணையதளம் மூலமாகவும் வாங்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x