

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி நொய்யல் நதிக்கரையில் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் ‘திறன்மிகு திருப்பூர்’ இலச்சினை அறிமுக விழா நேற்று நடந்தது.
மேயர் ந.தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடி, இலச்சினையை வெளியிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். ‘திறன்மிகு திருப்பூர்’ திட்டத்தின்கீழ், திருப்பூர் மாநகராட்சியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், தொழிலாளர் நலன் காக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிகழ்வில், மக்களவை உறுப்பினர்கள் கே.சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.