Published : 16 Dec 2016 09:56 AM
Last Updated : 16 Dec 2016 09:56 AM

சென்னை மியூசிக் அகாடமியில் மார்கழி இசை விழா தொடங்கியது - வயலின் கலைஞர் கன்யாகுமாரிக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது

மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மியூசிக் அகாடமியின் மார்கழி இசை விழா நேற்று தொடங்கியது. இதை தொடங்கிவைத்த மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரபல வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரிக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை வழங்கி கவுரவித்தார்.

சென்னை மியூசிக் அகாடமியின் 90-வது ஆண்டு விழா மற்றும் மார்கழி இசை விழாவின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பிரபல வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரிக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை மத்திய தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி வரவேற்புரை நிகழ்த்தினார். அகாடமியின் 90 ஆண்டு கால இசைப் பயணத்தை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து பேசிய அவர், ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற கன்யாகுமாரி மற்றும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் ஆகியோரை அறிமுகப்படுத்திப் பேசினார்.

விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

90 ஆண்டுகால இசைப் பாரம்பரியமிக்க மியூசிக் அகா டமியின் மார்கழி இசை விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்பதைப் பெருமை யாகக் கருதுகிறேன். கலாச்சாரப் பெருமை கள் கொண்ட தமிழகம், இசைக்கும், மொழிக்கும் பெரும் பங்காற்றியுள்ளது.

சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழா என்பது உலகின் மிகப்பெரிய இசை விழா வாகும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஆயிரக்கணக்கான இசைக் கச்சேரிகள் நடப்பது சென்னையில் மட்டுமே. இதன்மூலம் தமிழகத் தின் கலாச்சாரப் பெருமைகளும், இசைப் பாரம்பரியமும் காப் பாற்றப்பட்டு வருகிறது.

உணர்வுகளை வெளிப்படுத்தும்..

மார்கழி என்றாலே சென்னை என்று சொல்லும் அளவுக்கு இசைத் துறையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. மனி தனின் உணர்வுகளை வெளிப் படுத்தும் இசை ஒவ்வொரு வருக்கும் ஆன்ம பலத்தைக் கொடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிர மணியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x