

பொதிகை தொலைக்காட்சியில் நாளை காலை 7.30 மணிக்கு ‘நம் விருந்தினர்’ நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.முரளியின் நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பானதன் தொடர்ச்சி மற்றும் நிறைவுப் பகுதியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்.
தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 7.30 மணிக்கு ‘நம் விருந்தினர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பா கிறது. இதில், சென்னை மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளியுடன் சிறப்பு நேர் காணல் நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிபரப்பானது. இசை, எழுத்து, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் தனது ஈடுபாடு, பங்களிப்பு குறித்து அவர் விரிவாக பகிர்ந்துகொண்டார்.
அதன் 2-வது மற்றும் நிறைவுப் பகுதி நாளை ஒளிபரப்பாகும் ‘நம் விருந்தினர்’ நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. இதில் அவர் தனது பெற்றோர், பள்ளி, கல்லூரி, குடும்பம், குழந்தைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.
குறிப்பாக, மெட்ராஸ் கிறிஸ்டி யன் கல்லூரிப் பள்ளியின் அப்போ தைய முதல்வர் குருவில்லா ஜேக்கப், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுவாமி நாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள் தனது வளர்ச்சிக்கு எந்த வகை யில் உத்வேகம் அளித்தனர் என்பதையும், பள்ளி நாட்களில் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு களில் ஆர்வம் ஏற்பட தன் அம்மா எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார் என்பதையும் அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள் கிறார்.
கட்டிடக் கலை நிபுணரான மனைவி தாரா முரளி, குடும்பத் தலைவியாக ஆற்றிவரும் பணி கள், பிள்ளைகள் கிருஷ்ணா முரளி, காந்தா முரளி ஆகியோரது படிப்பு, வேலை, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட தகவல்களையும் இந்த நிகழ்ச்சியில் அவர் சுவையாகப் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன், பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமி வழங்கிவரும் ‘சங்கீத கலாநிதி’ விருது குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார்.
டிடி பொதிகை தொலைக்காட்சி யின் உதவி இயக்குநரும், டிடி (போர்ட் பிளேர்) தொலைக்காட்சி யின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவரு மான எஸ்.அனந்தநாராயணன் நேர்காணல் நடத்திய இந்த நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகிறது.