நாட்டியாஞ்சலி விழா திட்டமிட்டபடி தொடங்குமா?

நாட்டியாஞ்சலி விழா திட்டமிட்டபடி தொடங்குமா?
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டியாஞ்சலி விழா தொடங்குவது குறித்து, சுற் றுலாத் துறையிடம் இருந்து இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் திட்ட மிட்டபடி விழா தொடங் குமா என சந்தேகம் நிலவு கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ‘இந்திய நாட்டியாஞ்சலி’ விழா நடைபெறும்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் நடராஜன், கடந்த நவம்பர் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் 20-ம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தார். தற்போது, கடற்கரை கோயில் வளாகத்தில் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் வார்தா புயல் தாக்குதல் ஆகிய சம்பவங்களால் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை வட்டாரங்களில் விசா ரித்தபோது, ‘மாமல்லபுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி குறித்து இதுவரை முறை யான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மூலம் அறிவிக்கப் படும்’ என்று அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in