

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை தொடரவும், பூரண நலம் பெறவும், இறையருள் துணை நிற்கட்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று விரைவில் வீடு திரும்பி தனது பணிகளை தொடர்வார் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்தனர்.
ஆனால் அவருக்கு மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை தொடருகிறது என்னும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. அவருக்கு நல்ல சிகிச்சையை தொடரவும், பூரண நலம் பெறவும், இறையருள் துணை நிற்குமாக'' என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.