திருக்குறள் பாரத கலாசாரத்தையும், நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆர்.என்.ரவி
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆர்.என்.ரவி
Updated on
1 min read

சென்னை: திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," "ஆளுநர் ரவி , பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று #G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in