Published : 19 Dec 2016 09:02 AM
Last Updated : 19 Dec 2016 09:02 AM

‘தி இந்து பெண் இன்று’ மகளிர் திருவிழாவில் பங்கேற்றது 10 புத்தகங்கள் படித்த அனுபவத்தை தந்தது: பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி பாராட்டு

‘தி இந்து பெண் இன்று’ சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் பங்கேற்றது 10 புத்த கங்களை படித்த அனுபவத்தை தந்தது என்று பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி தெரிவித்தார்.

‘தி இந்து - தமிழ்' நாளிதழின் இணைப்பிதழாக ஞாயிறுதோறும் வெளியாகும் ‘பெண் இன்று’ சார்பில் நேற்று நெய்வேலியில் மகளிர் திருவிழா நடைபெற்றது. ‘தி இந்து’ வாசகர் திருவிழா தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடை பெற்றுவரும் நிலையில், ‘தி இந்து- பெண் இன்று’ சார்பில் பெண் வாசகர்களுக்காக ‘மகளிர் திருவிழா’ ஊர்கள்தோறும் கோலா கலமாக நடத்தப்பட்டு வருகிறது. அசத்தலான போட்டிகள், அட்ட காசமான பரிசுகளுடன் நெய்வேலி டவுன்ஷிப், சமுதாயக் கூடத்தில் நேற்று மகளிர் திருவிழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசியதாவது:

மகளிர் தற்போது அனைத்து பணிகளிலும் கால் பதித்துள்ளனர். ஓரளவுக்கு பொருளாதார சுதந் திரம் உள்ளது. இருந்தாலும் முழு வெற்றியோ, இலக்கையோ அடையவில்லை. பயமில்லாமல் வெளியே சென்றால்தான் முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். குடும்பம், அரசாங்கம், போலீஸ், நீதித்துறை மற்றும் சமூகம் ஆகியவை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு பாதிப்பு என்றால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும். உடலை பாது காப்பதே பெண்களுக்கு பெரிய வேலையாக உள்ளது.

திரைப்படங்களில் பள்ளிக்கூட காதல் சம்பவங்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. தற்போது டியூஷன் சென்டரில் படிக்கச் சென்ற குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். தவறான வார்த்தை களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தல் போலீஸாருக்கும் அவசியம்.

முதலில் வலிமையான தாய் மார்கள் தேவை. அவர்களுக்கு தைரியம் தேவை. தந்தையும் பாது காப்பு உணர்வை தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு குடும்பத் தில் மரியாதை கொடுக்க தொடங் கினால் சகோதர குழந்தைகளும் அதை பின்பற்ற தொடங்குவார்கள்.

சினிமாக்களை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வத்தைவிட, முதலில் நாம் வாழும் ஊரைப் பற்றி அறிவது அவசியம். இந்த மகளிர் திருவிழாவில் பங்கேற்றது 10 புத் தகங்கள் படித்த அனுபவத்தை தந்தது என்றார்.

பெண்களிடம் துணிவு

விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி கோமதி விஜயகுமார் பேசியதாவது: நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக நாம் அச்சப்படுகிறோம். ஆனால் விழிப்புணர்வின் விளைவாக நமக்கு நடக்கும் குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களுக்கு சென்று எடுத்துச் சொல்லும் துணிவு வந்துள்ளது என்பதுதான் உண்மை.

பெண்ணுக்கு கூர்மையான ஆயுதம் அறிவுதான். அறிவால் அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். நாம் வீட்டை விட்டு எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிகளும் முன்னேற்றத்தின் அடை யாளம். பெண்களின் முன்னேற்றத் தின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்கள் கொடுக்கும் விமர்சனங்களுக்கு நாம் மனதளவில் இடம் கொடுக் கக் கூடாது. மனம் வேதனை அடைந்தால் உன்மையான தோழி களிடம் பகிர்ந்துகொண்டாலே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக் கும். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தயக்கமின்றி அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுக வேண்டும். என்ன குற்றம் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை சமுதாயமும் சேர்ந்து குற்றம்சாட்டுவதால்தான் நடந்த உண்மைகளை வெளியே கூற தயங்குகிறார்கள். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியத்தை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் பங்கேற்ற மகளிர்.

பெண்கள் முன்னேற்றம் முக்கியம்

நெய்வேலி மகளிர் மன்ற தலைவர் யோகமாயா ஆச்சாரியா பேசியதாவது:

எங்கள் மகளிர் மன்றத்தில் என்எல்சியின் உதவியோடு பெண் களுக்குத் தேவையான சிறுதொழில் பயிற்சி, சான்றிதழ் பயிற்சி, தொழில்திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு உதவிகளை நாங்கள் செய்துள்ளோம். பெண்கள் முன் னேற்றம் அடைந்தால்தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும் என்றார்.

மன பலம் அவசியம்

கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.மாதவி பேசிய தாவது: தங்கள் நலனில் பெண்கள் அக்கறை செலுத்துவது அவசி யம். சிறுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 30 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அவசியம். மனநலம் மகிழ்வாக இருந்தால்தான் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும். அதற்கு மன பலம் பெண்களுக்கு அவசியம் என்றார்.

இதைத் தொடர்ந்து ‘குழந்தை வளர்ப்பில் சிறந்தது இந்தக் காலமா? அந்தக் காலமா?’ என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. ஆரோக்கிய வழிகாட்டி, கிராமிய நாட்டுப்புற பாடல்கள், பாட்டுப் போட்டி மற்றும் கோலப்போட்டி என நாள் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. பலூன் உடைத்தல், மைமிங், கப் அடுக்கும் போட்டி, மாத்தி யோசி, தலையில் ஸ்ட்ரா செருகும் போட்டி, நடனப் போட்டி என மாலை 5 மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றன. மதிய உணவும் அரங்கிலேயே வழங்கப்பட்டது.

ஏராளமான பெண்கள் இந்த மகளிர் திருவிழாவில் பங்கேற்றனர். விழா அரங்கில் ‘தி இந்து’ தமிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களும் விற்பனை செய்யப் பட்டன. நிகழ்ச்சி நிறைவில் ‘தி இந்து’ இணைப்பிதழ்கள் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் நன்றி கூறினார்.

காலையில் கேத்தரின் அனி தாவும், மாலையில் சின்னத் திரை தொகுப்பாளினி தேவி கிருபாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ‘தி இந்து’ சர்க்குலேஷன் மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த மகளிர் திருவிழாவை ‘தி இந்து- பெண் இன்று’ உடன் லலிதா ஜுவல்லர்ஸ், தி சென்னை சில்க்ஸ், எச்டூஎச் ஆரஞ்ச் இம் பெக்ஸ் கரூர், ஜெயா உடோபியா, தங்கம் நல்லெண்ணெய், மை ட்ரீம்ஸ், விப்ஸ் மற்றும் புதுச்சேரி ஹோட்டல் கார்த்திக் குழுமம், விழுப்புரம் க்ரீன் ட்ரென்ட்ஸ் இணைந்து வழங்கின. நிகழ்ச்சி யில் பெண் முகவர்கள், முகவர் களின் இல்லத்தரசிகள் கவுரவிக் கப்பட்டனர். அமைதி அறக்கட்டளை மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

‘குடும்பத் தலைவிகள்தான் காரணம்’

‘தி இந்து’ ஆசிரியர் அசோகன் வரவேற்புரையில் பேசியதாவது:

தமிழ் இந்து நாளிதழை குடும்பங்களில் கொண்டுசேர்த்ததற்கு குடும்பத் தலைவிகள்தான் முக்கியக் காரணம். கவலைப்படும், அச்சப்படும் சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன. அதை செய்தித் தாளில் குழந்தைகள் படிக்கும்போது மனதை கெடுக்கும் விதத்தில் அமையக்கூடாது. செய்தித் தாள் காலையில் வீட்டுக்கு வந்தவுடன் பல வீடுகளில் முதலில் குழந்தைகள்தான் அதை எடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தரும் வகையில் செய்தித் தாள் இருக்க வேண்டும். குழந்தைகள் பத்திரிகையை எடுத்துப் பார்த்தால் அவர்களை உயர்வடையச் செய்யும் தகவல்கள்தான் இருக்க வேண்டும். குழந்தைகளை மனதில் வைத்துதான் வடிவமைக்கிறோம். அதை முழுவதும் உணர்ந்துள்ளதற்காக நன்றி தெரிவிக்கும் விழா இது.

‘பெண் இன்று’ பக்கங்களை கையடக்க வடிவில் கொண்டுவர ஆலோசனை தெரிவித்ததால், அதன் அடிப்படையில் செய்துள்ளோம். ‘பெண் இன்று’ இணைப்பு உங்களுக்கு 4 விஷயங்களை கண்டிப்பாக தருகிறது. பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் நிம்மதி, தோழியாக இருந்து தரும் ஆறுதல், சந்தோஷமாக உங்களை உணர வைக்கும் மகிழ்ச்சி, வாழ்க்கையில் அடுத்தகட்ட உயரத்துக்கு தன்னம்பிக்கை எண்ணம் என அனைத்து விஷயங்களையும் தருகிறோம் என்றார்.

மகளிர் திருவிழாவில் நடைபெற்ற கரகாட்டத்தில் அருள் கிருஷ்ணா நாட்டிய குழுவினரோடு நிகழ்ச்சியை தொகுத்தளித்த சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் ஆடி மகிழ்ந்தார்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x