Published : 12 Dec 2016 10:27 AM
Last Updated : 12 Dec 2016 10:27 AM

பள்ளிகளில் ‘ஸ்பேஸ் சயின்ஸ் கிளப்’-விண்வெளி ஆராய்ச்சி கல்வியை எளிதாக கற்க விழிப்புணர்வு: புதிய முயற்சியில் மதுரை பொறியாளர்

பொறியியல் படித்துவிட்டு அமெரிக் காவில் வேலைபார்ப்பதை கவுரவ மாக நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், மதுரையைச் சேர்ந்த ஒருவர் ஊர் ஊராகச் சென்று பள் ளிக் குழந்தைகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(29). சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஇ எலெக்ட்ரானிக் கம்யூ னிகேஷன், எம்இ பயோ மெடிக்கல் பொறியியல் படிப்பு முடித்துள்ள இவர், சென்னையில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில் அவ ருக்கு ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, அந்த வேலையில் ஈர்ப்பு ஏற்பட வில்லை. சிறிது காலத்தில் அந்த வேலையை உதறிவிட்டு, தற்போது பள்ளிக் குழந்தைகள் மத்தியில் விண்வெளி ஆராய்ச்சிக் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பள்ளிகளை பொறுத்தவரையில் என்சிசி, என்எஸ்எஸ், சாரண-சாரணியர் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் என பல அமைப்புகள் உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்களுக்கு மதிப்பெண் கல்விக் கான இயற்பியல், வேதியியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளன. பெரு நகரங்களில் சில பிரபல தனியார் பள்ளிகளில் ரோபாட்டிக் கிளப்கள் கூட உள்ளன. ஆனால், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக்கென ஒரு கிளப் (space science club) எந்தவொரு பள்ளியிலும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது அதற்கான முயற்சிகளில் பொறி யாளர் சுரேஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: முயற்சி செய்தால் ஒரு செயற்கைக் கோளையே ஒரு மாணவரால் உருவாக்க முடியும். குட்டி விமானம், ஹெலிகாப்டர், ரோபோட், கார் எல்லாவற்றையும் வடிவமைக்க முடியும் என்பதை புரிய வைத்து மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி என்றால் நம்மால் முடியாது என்ற தவறான கருத்து விதைக்கப்படுகிறது. அறிவியல், விஞ்ஞான விஷயங்களை எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கற்றுக் கொடுத்தால் எளிதாக சாத்தியப் படுத்தலாம். கற்றுக்கொள்ளலாம். இதை ஒன்றாவது வகுப்பு படிக் கும் குழந்தைகள் முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு அரசு, தனியார் பள்ளியிலும் ‘விண்வெளி அறிவியல் கிளப்’ (space science club) தொடங்கப்பட வேண்டியது அவசியம். விண்வெளி அறிவி யல் கிளப் அமைப்பதற்காக டெல்லி, லக்னோ முதல் தமிழகத் தின் ஒவ்வொரு மாவட்டமாக பள்ளி மாணவர்களைச் சந்தித்து, இதைத்தான் சொல்லி வருகிறேன். விமானம், ராக்கெட், ரோபோட் உள் ளிட்ட புரியாத அறிவியல் விஷயங் களை எப்படி தயாரிப்பது என பாமரருக்கும் புரியும் அளவுக்கு எளிமையாக சொல்லிக் கொடுக் கிறேன்.

மதிப்பெண் கல்விக்கு அப்பால், இவற்றையெல்லாம் குழந்தை களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்காக இந்த கிளப் அமைக்க, அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக எல்லா உதவிகளும் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். அரசு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

நிறைய ‘கலாம்’களை உருவாக்கலாம்

சுரேஷ்குமார் மேலும் கூறும்போது, “அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தனி ஆய்வுக்கூடம் ஒதுக்குவதுபோல, இந்த விண்வெளி அறிவியல் கிளப்புக்கு ஒரு வகுப்பறைக்கான இடத்தையும் வாரத்துக்கு ஒரு வகுப்பையும் ஒதுக்கினால் போதும்.

இந்த கிளப்பில் விண்வெளி அறிவியல் சார்ந்த படிப்புகளை படித்த வர்களைப் பணி அமர்த்தி, வீடியோக்களில் விண்வெளி அறிவியல் விஷயங்களை முதலில் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டி, விண் வெளி என்றால் என்ன, உலகம் எப்படி அமைந்திருக்கும் என்ற அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன்பின், அதை செயல்முறை பயிற்சி விளக்கம் செய்து காட்டி, அவர்களே சுயமாக எளிய அறிவியல் கருவிகளை உருவாக்கத் தூண்ட வேண்டும்.

முதல் வகுப்பில் ஆரம்பித்து பிளஸ் 2 வரை இப்படி 12 ஆண்டுகள் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால், எதிர்காலத்தில் நிறைய ‘கலாம்’களை உருவாக்கலாம். தற்போது மாணவர்கள் எல்லோரையும் இன்ஜினீயர், டாக்டர்களாக்க மூளைச் சலவை செய்கிறோம். சிறிய குழந்தைகளிடம் அறிவியல் விஷயங்களைத் தூண்டுவதற்கு இந்த விண்வெளி அறிவியல் கிளப் நிச்சயமாக உந்துதலாக இருக்கும்” என்றார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x