

சென்னை: பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பெண்களை பாஜக அவமானப்படுத்தியது, பெண்களுக்கு பாதுகாப்பு தராததற்காக ஜன.27-ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்ல உள்ளேன். யார் வேண்டுமானாலும் என்னுடன் இணைந்து பயணம் செய்யலாம்.
இது அரசியல், பொது சேவை, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டுள்ள சாதாரண பெண்கள், குழந்தைகள், பெண் காவலர்கள் என அனைத்து பெண்களுக்கான பயணம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.