Published : 15 Jan 2023 06:11 AM
Last Updated : 15 Jan 2023 06:11 AM
சென்னை: கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, இணை ஆணையர் வே.விமலநாதன் அறிவுறுத்தல் பேரில், சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் இல்லாத நேரத்தில் பணியிடத்துக்கு அருகில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 190 கடைகள், நிறு வனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 120 கடைகள் மற்றும்நிறுவனங்களில் பணியாளர் களுக்கு இருக்கை வசதி செய்துத் தராமல் அரசு விதியினை மீறி முரண்பாடுகளுடன் செயல் படுவது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும், பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்துத் தராத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகள், நிறுவனங்கள் மீதுநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT