Published : 15 Jan 2023 04:20 AM
Last Updated : 15 Jan 2023 04:20 AM
கோவில்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும். இந்தாண்டு பொங்கல் பண்டிகை இன்று (15-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. மறுநாள் (16-ம் தேதி) ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் நேற்று காலை 10.30 மணி வரை எட்டயபுரம் ஆட்டுச்சந்தை நடந்தது. சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடுரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையானது. நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனைநடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆடு வளர்ப்போர் கூறும்போது, ‘‘தீபாவளி, பொங்கல், ரம்ஜான் பண்டிகையையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடை பெறும்.ஆனால், இந்தாண்டு போதிய மழையில்லை. இருந்த போதும் ஆடுவளர்போர் அதிகம் வந்துள்ளோம்.
ஆனால், வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இதனால் எதிர்பார்த்த விற்பனை இல்லை. வழக்கமாக இந்த 3 பண்டிகைகளின் போது முன்னதாக வரும் சனிக்கிழமை சந்தையில் குறைந்தது ரூ.7 கோடி வரையாவது விற்பனை இருக்கும். ஆனால், முந்தைய ஆண்டுகளை பார்க்கும் போது இந்தாண்டு விற்பனை மந்தமாகவே நடந் துள்ளது.
நேற்று மாலை 3 மணியில் இருந்து இன்று காலை 10.30 மணிவரையிலான 19.30 மணி நேரத்தில்சுமார் 4 ஆயிரம் ஆடுகள் வரையேவிற்பனையாகி உள்ளது. வெள்ளாடுகள் வரத்து அதிகமாகவும், செம்மறி ஆடுகள் வரத்து குறைவாகவும் காணப்பட்டது. வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஆடுகளை கேட்டதால் ஏராளமானோர் ஆடுகளை திரும்பக் கொண்டு சென்றுவிட்டனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT