வார்தா புயல் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை: நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை கண்காணிக்க உத்தரவு

வார்தா புயல் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை: நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை கண்காணிக்க உத்தரவு
Updated on
2 min read

‘வார்தா’ புயல் குறித்த முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அப்போது நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை கண்காணிக்குமாறு பொதுப்பணித் துறைக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரம் நோக்கி நகர்ந்த வார்தா புயல் திசை மாறியது. இப்புயல் சென்னை அருகில் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதைத் தொடர்ந்து, புயல் தாக்குதலை சமாளிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத் துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உத யகுமார், தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர் கள், வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்ய கோபால், காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அதிகாரிக ளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த அறிவுறுத்தல்கள்:

* சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம் மாவட் டங்களுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து புயல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* மாவட்ட நிர்வாகம், கள அதி காரிகள் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்துவரப்படும் பொது மக்களுக்கு போதுமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.

* ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல்படை யினர் ஆகியோர் தேவையான இடங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் போதுமான ஜென ரேட்டர் வசதி, ஆக்சிஜன் சிலிண் டர்கள் இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்படு கிறது. பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் பயிலும் மாணவர் களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதிகளை செய்து தரவேண்டும்.

* இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் நிறு வனங்களும் தங்கள் பணியாளர் களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

* பொதுப்பணித் துறையினர் நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், முகத்துவாரங்களை தொடர்ந்து கண்காணித்து, கடலுக்குள் நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பால் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் எடுக்க வேண்டும்.

இது தவிர பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை மழை நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம். போதுமான உணவு, மருந்துப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் சொந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை இந்த நேரத் தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in