மலையக தமிழர்கள் நலனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை: இலங்கை எம்.பி. மனோ கணேசன் வருத்தம்

மலையக தமிழர்கள் நலனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை: இலங்கை எம்.பி. மனோ கணேசன் வருத்தம்
Updated on
1 min read

சென்னை: இலங்கையைச் சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணி அமைப்பின் தலைவரும், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள், தெற்குப் பகுதியில் உள்ள மலையகத் தமிழர்கள் 50 சதவீதம் உள்ளனர்.

ஆனால், இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் ஈழத் தமிழர்கள் நலன் பற்றியேபெரிதும் பேசி வருகின்றனர். அங்குள்ள மலையகத் தமிழர்களின்நிலையை யாரும் கண்டுகொள்வதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை,புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்களாகஅழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் மலையகத் தமிழர்கள்.

அவர்கள் ஈழத் தமிழ் போராலும்,சிங்கள இனவாதிகளாலும் இன்றும்மலையகத் தமிழர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களைப் போலவே மலையகத் தமிழர்களின் நலன்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு, இந்திய மற்றும் தமிழக அரசுகள் உதவ முன்வர வேண்டும். இந்தவிவகாரம் தொடர்பாக முதல்வர்மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, எங்கள் கோரிக்கைகள் முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள அயலகத் தமிழக மாநாடு சிறப்பாக உள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in