Published : 14 Jan 2023 06:02 AM
Last Updated : 14 Jan 2023 06:02 AM

திருப்பத்தூர் | கடனை திருப்பி செலுத்த தவறியதால் கடன் பெற்றவர் கடை முன்பாக வங்கி மேலாளர் தர்ணா

ஹார்டுவேர்ஸ் கடை முன்பாக கொடுத்த கடனை திருப்பி கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட வங்கி மேலாளர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் விஷமங் கலம் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி(47). இவர், அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தொழில் வளர்ச்சிக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் செலுத்தாததால், வங்கி அதி காரிகள் பலமுறை அவரிடம் நேரில் சென்று பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர். மேலும் இது சம்பந்தமாக நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த வங்கி மேலாளர் ஏமன் குமார் என்பவர் நேற்று அருணகிரி நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்கு சென்று பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினார். அவரிடம், அருணகிரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே கடனை உடனடியாக செலுத்த வேண்டும் எனக்கூறி ஹார்டுவேர்ஸ் கடை முன்பு காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வங்கி மேலாளர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்த வங்கி உயர் அதிகாரிகள் அங்கு சென்று கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என அருணகிரிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் மேலாளரை சமா தானப்படுத்தி அழைத்து வந்தனர். சுமார் 8 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்காமல் வங்கி மேலாளர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற் படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x