சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும்
Updated on
1 min read

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

‘வார்தா’ புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது.

மின்சாரம், பால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகபட்சம் 2 நாட்களுக்குள் அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in