தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு: அரசு பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை தேர்வு

தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு: அரசு பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை தேர்வு
Updated on
1 min read

தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஈரோடு குமலன்குட்டை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்சார்பில் மாநில அளவிலான 24-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவை கே.பி.ஆர். பொறி யியல் கல்லூரியில்நடைபெற்றது. 32 மாவட்டங் களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 260 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இதில் இருந்து மாநில அளவில் 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க தகுதி பெற்றன.

இம்மாநாடு மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 28, 29-ம் தேதிகளில் நடைபெற வுள்ளது. இதில் குமலன்குட்டை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை யும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டி ஆசிரியை லோ.புனிதவள்ளி, மாணவிகள் பர்வின்பானு, பிரியா, சந்திகா, மற்றொரு பிரியா, அஞ்சலி ஆகியோர் இந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித் திருந்தனர்.அழிய மறுக்கும் பீடித்தொழில் என்னும் தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்திருந்த கட்டுரை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி யில் நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் சமர்ப்பிக்க சிறந்த ஆய்வுக்கட்டுரையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். இம்மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் சி.பெ.மகாராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ரவிச்சந்திரன், உதவித் தலைமை ஆசிரியை ஜெ.காஞ்சனாதேவி, ஒருங்கிணைப்பாளர் தாட்சாயினி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in