மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைவு: முதல்வர் இரங்கல் 

மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன்
மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன்
Updated on
1 min read

சென்னை: மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்," மூத்த நரம்பியல் மருத்துவர் திரு. நாகராஜன் வெங்கட்ராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்தார் நாகராஜன். மதுரை AIIMS மருத்துவமனையின் தலைவராக திரு. நாகராஜன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in