

சென்னை: கோவையில் சாலைகளை சீரமைக்க ரூ.200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய (ஜன.13) கேள்வி நேரத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சியில் உள்ள மசால் லேஅவுட் பகுதியில் உள்ள கால்வாயை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "மாநகராட்சி மூலம் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு தான் இந்த பணியை தொடங்கு முடியும். இல்லை என்றால் நீங்களே போராட்டம் செய்வீர்கள். ஏற்கெனவே கோவையில் சாலைகளில் சரி இல்லை என நீங்கள் கூறி இருக்கிறீர்கள். கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.