சரியான நேரத்துக்கு விமான சேவை: கோவை விமான நிலையத்துக்கு 13-வது இடம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விமான போக்குவரத்தை ஆய்வு செய்யும் வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி சார்பில் சமீபத்தில் சர்வதேச அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்த விமான போக்குவரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

விமான நிலையங்களுக்கு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவது, புறப்பட்டுச் செல்வது, பயணிகள் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், சர்வதேச அளவில் சரியான நேரத்துக்கு விமானங்களை இயக்கும் உலகின் முதன்மையான 20 விமான நிலையங்களுக்கான பட்டியலில், கோவை விமான நிலையம் 13-வது இடத்தை பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in