

சேலம் வெற்றிவேல் வெடி மருந்து தொழிற்சாலை இயக்குநர் விஜய கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
துறையூர் முருகன்பட்டியில் உள்ள எனது வெடிமருந்து தொழிற் சாலைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப் படையில் வெடிமருந்து தொழிற் சாலைக்கு வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் உரிமம் வழங்கினார். இந்த உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் கடந்த டிச.1-ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியானதையடுத்து தொழிற் சாலைக்கான உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்ட தடை யில்லா சான்றையும் ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் டிச. 17-ம் தேதி உத்தரவிட்டார். எங்களி டம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பாமல் தடையில்லா சான்றிதழை ரத்து செய்வது சட்ட விரோதமானது.
தடையில்லா சான்றிதழ் ரத்து செய்யப்பட்டிருப்பதால் வெடிமருந்து தொழிற்சாலைக்கான உரிமம் ரத்தாக வாய்ப்புள்ளது. எனவே தடையில்லா சான்றிதழை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் தகவல் கேட்டு தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தர விட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.