Published : 13 Jan 2023 06:10 AM
Last Updated : 13 Jan 2023 06:10 AM

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 13) வெளியாகிறது.

இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலை.யின்தொலைநிலைக் கல்வியில் 2022-ம் ஆண்டு ஜூன் பருவத்தில் எம்பிஏ மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று (ஜனவரி 13) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்றஇணையதளத்தில் அறிய லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x