ஜனவரி 17-ம் தேதி எம்ஜிஆர் சிலைக்கு பழனிசாமி மரியாதை

ஜனவரி 17-ம் தேதி எம்ஜிஆர் சிலைக்கு பழனிசாமி மரியாதை

Published on

அதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி, வரும் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னைராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரதுசிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வர்.

அதேபோல மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் சிலைக்குமாலை அணிவித்தும், படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவியும் மரியாதை செலுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in