Published : 14 Dec 2016 08:45 AM
Last Updated : 14 Dec 2016 08:45 AM

சசிகலாவுடன் என்.ராம் சந்திப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் தோழி சசிகலாவை ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவிடம் என்.ராம் இரங்கல் தெரிவித்தார்.

சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தனது தோழி ஜெயலலிதாவின் சிறப்பான பல குணங்கள் குறித்த நினைவுகளை சசிகலா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண் டார். அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக முன்னேறி வந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவர் மரணமடைந்தபோது தான் மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானதாக சசிகலா தெரிவித்தார்.

அப்போது சசிகலாவுக்கு ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் ஆறுதல் கூறினார். மேலும், அண்மை நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x