Published : 21 Dec 2016 09:19 AM
Last Updated : 21 Dec 2016 09:19 AM

ஜெயலலிதா நினைவிடத்தில் 16-வது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் 16-வது நாளான நேற்று ஆயிரக்கணக்காண தொண் டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்ல டக்கம் செய்யப்பட்டது. அன்று முதலே ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் ஜெயலலிதா நினைவிடத் துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலை யில், நேற்று அமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி தலைமை யில் சேலம் அரசு போக்கு வரத்துக் கழக அண்ணா தொழிலாளர்கள் சார்பில் 108 போக்குவரத்து தொழிலாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்டனர். பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தென்சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செல் வக்குமார் தலைமையில் திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி செலுத் தப்பட்டது. இதேபோல, சமையல் கலைஞர் இனியவன் தலைமை யில் ஆர்.கே.நகர் மக்கள், சமையல் கலைஞர்கள் சார்பில் ஜெய லலிதாவின் உருவம் பொறித்த 68 கிலோ இட்லியை நினைவிடத்தில் படைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அந்த இட்லியை எடுத்துச் சென்று மெரினா கடற்கரையில் கரைத்தனர். மலேசிய அரசு சார்பில் அந்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

மொட்டையடிக்க வசூல்

ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் நூற்றுக்கணக்கானோர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மொட்டையடிக்க பணம் வசூலிப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து அதிமுக தலைமை கழகம் சார்பில் சில நாட்கள் இலவசமாக மொட்டை அடிக்கப்பட்டது. ஆனால், தற்போது மொட்டையடிக்க ரூ.100 முதல் ரூ.150 வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை கோயம்பேட்டைத் சேர்ந்த பெருமாள் கூறுகையில், “தொண்டர்கள் இங்கு மொட்டை யடிக்க இலவசம் என்று தெரி வித்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக இங்கு கட்டாய வசூல் செய்து வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x