Published : 11 Dec 2016 09:32 AM
Last Updated : 11 Dec 2016 09:32 AM

ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது: விஜயதாரணி எம்எல்ஏ கருத்து

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

விழா ஒன்றில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்பதற்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நேற்று மாலை புதுச்சேரி வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை இரவு 11.30 மணிக்கு இறந்ததாகக் கூறியுள் ளது. ஆனால் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இரவு 11.09 மணிக்கு இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றி தழில்கூட இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்றுதான் இருக்கிறது. அப்படி இருக் கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய் தியை கொடுத்தார் என்று பார்க்கும் போது இந்த மரணத்தில் பல்வேறு சந் தேகங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன்.

75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாத சூழல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ இதுவரை வெளியிடப்படவில்லை. மக்களின் சந்தேகத்தை போக்க இப்போதாவது அந்த புகைப்படங்களையோ, படக் காட்சி களையோ அதிமுகவோ அல்லது தமிழக அரசோ வெளியிட வேண்டும்.

ஆளுநர் அப்போலோ மருத்துவ மனைக்கு சென்றாரே தவிர, ஒரு முறை கூட சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முதல்வரை அவர் பார்க்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். ஒரு முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. முதல்வர் இறப்பதற்கு அரை மணி நேரத் துக்கு முன்பாகவே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உண்மைகளை மக்களிடம் கூற வேண்டும் என்றார்.

உள்கட்சி விவகாரம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க போவதாக தகவல் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''அது அவர்களின் உள்கட்சி விவகாரம். அக்கட்சியைச் சேர்ந்த செயற்குழு, பொதுக்குழுக்களை கூட்டி முடிவெடுத்துக் கொள்வர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x