மதுரையில் ஏப்.1 முதல் 24 மணி நேர விமான சேவை: விமான போக்குவரத்துத் துறை நடவடிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை உட்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர விமான சேவையை செயல்படுத்தும் விதமாக உரிய நடவடிக்கைகளை விமான போக்குவரத்துத் துறை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை விமான நிலைய தரப்பில் கூறும்போது, "மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவையாக தற்போது இலங்கை, துபாய், சார்ஜா, சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் , மலேசியா, ஜப்பான், போன்ற நாடுகளுக்கான விமான சேவைகள் கிடைக்கும் விதமாக தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இரவு நேர உள்நாட்டு விமான சேவையுடன் வெளிநாட்டு விமான சேவைகளும் துவங்கும் வகையில், அகர்தலா, இம்பால், மதுரை ,போபால், சூரத் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் வரும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் 24 x 7 மணி நேர சேவை வழங்குவதற்காக, விமான வான் போக்குவரத்து கட்டுபாடு, (ஏர்போர்ட் டிராபிக் கண்ட்ரோல்) மற்றும் வலைதள தொடர்புச் சேவை (கம்யூனிகேஷன் நெட்வொர்க் சர்வீஸ்) ஆகிய பிரிவுகளுக்கு ஆட்களை பணி நியமனம் செய்வதும், விமான நிலைய பாதுகாப்பு பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24x7 இரவு நேர பயணச் சேவைக்கு தயாராகும் என தெரிகிறது” என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in