லஷ்மன் ஸ்ருதி சார்பில் 12-வது ஆண்டாக ‘சென்னையில் திருவையாறு’ நாளை தொடக்கம்: காமராஜர் அரங்கில் 25 வரை நடக்கிறது

லஷ்மன் ஸ்ருதி சார்பில் 12-வது ஆண்டாக ‘சென்னையில் திருவையாறு’ நாளை தொடக்கம்: காமராஜர் அரங்கில் 25 வரை நடக்கிறது
Updated on
1 min read

லஷ்மன் ஸ்ருதி சார்பில் நடத்தப்படும் 12-வது ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி காமராஜர் அரங்கத்தில் நாளை (18-ம் தேதி) காலை 11 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது.

லஷ்மன் ஸ்ருதி சார்பில் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 12-வது ஆண்டு நிகழ்ச்சி காமராஜர் அரங்கத்தில் நாளை காலை 11 மணிக்கு திருப் பாம்புரம் டி.எஸ்.எச்.ராமநாதனின் நாதஸ்வர இசையுடன் தொடங்கு கிறது. மாலையில் நிகழ்ச்சிகளை பாடகி வாணி ஜெயராம் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்ஜிஆர் திருவுருவச் சிலைகளை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைக்கிறார்

விழாவின் சிறப்பம்சமாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் சிறந்த கலைஞர் ஒருவருக்கு இசைச்சேவை மற்றும் வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக ‘இசை ஆழ்வார்’ என்ற கவுரவ விருதும், தங்கப் பதக்கமும் வழங்கப் படுவது வழக்கம். இந்த ஆண்டுக் கான நிகழ்ச்சியில் ‘வயலின் மேஸ்ட்ரோ’ எல்.சுப்ரமணியத்தின் வாழ்நாள் இசை சேவையை பாராட்டி, ‘இசை ஆழ்வார்’ பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.

மாலை 4.45 மணிக்கு எல்.சுப்ரமணியத்தின் வயலின் இசை நிகழ்ச்சியோடு ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்வுகள் தொடங்குகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஷோபனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் முதல்நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

டிசம்பர் 25-ம் தேதி வரை நடக்க உள்ள ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி யில் நித்யஸ்ரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன், மஹதி, சிக்கில் குருசரண் உள்ளிட்ட பலரது இசை நிகழ்ச்சிகள் இடம்பெறு கின்றன. தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in