

அரசு அருங்காட்சியகத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலையை பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாலாஜா அடுத்துள்ள அவரக் கரை கிராமத்தின் கொல்லை மேடு பகுதியில் சில நாட்களுக்கு முன் பழமையான மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையுடன் மண்ணால் ஆன தானிய உறையின் உடைந்த பாகங்கள் இருந்தன. 110 செ.மீ உயரம், 70 செ.மீ அகலம் கொண்ட மகாவீரர் சிலை 1,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் தெரியவந்தது.
மகாவீரர் சிலை மற்றும் உடைந்த தானிய உறையின் பகுதி கள் வாலாஜா வட்டாட்சியர் பிரியாவிடம் ஒப்படைக்கப்பட் டன. பின்னர், இந்தப் பொருட் களை வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவானது.
அதன்படி, மகாவீரர் சிலை மற்றும் 8 துண்டுகள் அடங்கிய உடைந்த தானிய உறையின் பகுதிகள் அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலையை பொதுமக்கள் பார் வைக்கு அருங்காட்சியக அதிகாரிகள் வைத்துள்ளனர்.