இறைச்சிக் கடைகளை ஜன.16-ல் திறக்க தடை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி கடைகளை 16-ம் தேதி திறக்க கூடாது. அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி சாலை, போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள அறுவை மனைகள்,

துடியலூரில் உள்ள மாநகராட்சி இறைச்சிக்கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in