

கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜன. 13 (நாளை) முதல் வரும் 18-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் தினமும் காலை 9.20 மணிக்கு கோவையி லிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.