

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எதிர் வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினம். அதேபோல, 26-ம் தேதி குடியரசு தினம்.
இவ்விரு நாட்களிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரர்களுக்கான மது விற்பனைக் கூடம் ஆகிய அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி இவ்விரு நாட்களிலும் யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.