

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என் பது குறித்து ஆகஸ்ட் மாதத் தில் தமிழகம் முழுவதும் தொண் டர்களிடம் கருத்து கேட்க விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை அசோக்நகரில் புதன்கிழமை நடந்தது. கூட்டத் துக்குப் பிறகு நிருபர்களிடம் திரு மாவளவன் கூறியதாவது:
சேலத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு நடக்கிறது. இதில், தனி யார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, அரசாணை 92 நடை முறைப்படுத்துதல், தமிழ் வழிக் கல்வி, ஆதிதிராவிடர் பள்ளி களை சிறப்புப் பள்ளிகளாக மேம் படுத்துதல் பற்றி விவாதிக் கப்படும். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்பேன்.
கட்சியை மறுசீரமைக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். ஜூலை 4 ம் தேதி தருமபுரி இளவரசன் நினைவேந்தல் நாளாகும். இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ள அனு மதி தரவேண்டும். அங்கு அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
தலித் மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை பாமக செய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் தலித் மக்கள் மீது வன்முறை நடந்து வருகின்றன. இதில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது, வருத்தமளிக்கிறது. போரூர் கட்டிட விபத்து குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் மருத்துவம் உள்ளிட்ட தொழில்படிப்பு படிக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ் வாறு திருமாவளவன் கூறினார்.