ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முடிவை கைவிட வேண்டும்: காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் கோரிக்கை மனு அளித்த  காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கே.வி.இளங்கீரன் மற்றும் நிர்வாகிகள்.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் கோரிக்கை மனு அளித்த காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கே.வி.இளங்கீரன் மற்றும் நிர்வாகிகள்.
Updated on
1 min read

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கே.வி.இளங்கீரன் மற்றும் சங்க நிர்வாகிகள், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோரை நேற்றுசந்தித்து, நியாயவிலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகள் அடங் கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நியாயவிலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் நலனுக்கு கேடு விளைக்கும் செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது. கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான சத்துகளை மட்டும் செயற்கையான முறையில் வழங்குவது என்பது அச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும். மற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

செறிவூட்டப்பட்ட அரிசியிலேயே அனைத்து சத்துகளும் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை வாங்க மக்களை ஊக்கப்படுத்துவது, விவசாயிகள் மற்றும் சிறு, குறு அரிசி வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

எனவே, நியாயவிலைக் கடைகளில் செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட்டு, இயற்கையான உயிர்ச்சத்துகள் நிறைந்த தமிழர்கள் மரபுவழி அரிசி வகைகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in