Published : 21 Apr 2014 10:05 AM
Last Updated : 21 Apr 2014 10:05 AM

சோனியாவும் ராகுலும் சிவகங்கையை புறக்கணித்தது ஏன்?: ப.சிதம்பரத்தின் மீதான அதிருப்தி காரணமா?

அதிருப்தியின் காரணமாகவே காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுலும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடும் சிவகங்கை தொகுதிக்கு வராமல் புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோனியா காந்தி கன்னியாகுமரிக்கு மட்டும் வந்து விட்டுச் சென்றிருக்கிறார். சிவ கங்கையை அடுத்துள்ள ராமநாத புரத்துக்கு ராகுல் காந்தி இன்று வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் வட் டாரத்தில் ‘தி இந்து’விடம் பேசிய வர்கள் கூறியதாவது: இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியைத் தான் பிரதமர் வேட்பாளராக மறைமுகமாக முன்னிறுத்துகிறது காங்கிரஸ். இது தெரிந்திருந்தும் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ப.சிதம்பரம், தேர்த லுக்கு முன்பே, ‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காது’ என்றார். கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார்.

ஆனால், ’இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு தனக்குப் பதிலாக தனது மகனை வேட்பாளராக முன்நிறுத்தினார் சிதம்பரம். கூட் டணி இல்லாமல் தன்னால் ஜெயிக்கமுடியாது என்பது சிதம் பரத்தின் கணக்கு ஆனால், அவரது இந்த முடிவு இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை உண்டாக்கியதற் கான காரணங்களில் ஒன்றாகி விட்டது.

சிதம்பரத்தின் பொருளாதார கொள்கைகள் கடும் விமர்சனத் துக்கு உள்ளாகி இருக்கும் நிலை யில், அவரே போட்டியிலிருந்து விலகுவதால், காங்கிரஸ் தேறாது போலிருக்கிறது என்கிற தோற் றத்தை நாடு முழுக்க உண்டாக்கி விட்டது.

வாசனும் சிதம்பரமும் கோட்டா சிஸ்டத்தில் கட்சிப் பதவிகளை யும் எம்.பி., எம்.எல்.ஏ. சீட்களை யும் கேட்டு வாங்குகிறார்கள். கேபி னெட் அமைச்சராக துடிக்கிறார் கள். ஆனால் கட்சிக்கு சோதனை யான கால கட்டம் வரும்போது ஒதுங்கி ஓடுகிறார்கள். இதெல் லாம்தான் வாசன் மீதும் சிதம்பரம் மீதும் சோனியாவுக்கும் ராகுலுக் கும் கடும் அதிருப்தியை உண் டாக்கிவிட்டது, அதனால்தான் அவர்கள் சிவகங்கையை இந்த முறை புறக்கணித்துவிட்டனர்.

எனவே சோனியாவும் ராகுலும் நாடாளுமன்றத் தேர்தலுக் குப் பிறகு தமிழகத்தில் கோஷ்டி தலைகளை பின்னுக்குத் தள்ளி மக்கள் செல்வாக்குள்ளவர் களை முன்வரிசைக்கு கொண்டு வர தீர்மானித்துவிட்டனர். அதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலில், எந்தக் கோஷ்டியையும் சாராத மணிசங்கர் அய்யர் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், வசந்தகுமார், ஜோதிமணி, ரமணி உள்ளிட்ட 15 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x