பெருநகரங்களை போல் அருகில் உள்ள நகரங்களுக்கு அடிப்படை வசதி: தமிழக அரசு கொள்கை முடிவு
சென்னை: பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இன்றைய (ஜன.11) கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,"மதுரை போன்ற பெருநகரங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு, பெருநகரங்களில் உள்ளது போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல், எங்கு தேவை உள்ளதோ, அங்கு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்." இவ்வாறு அவர் கூறினார்.
