

நான் வியந்து பார்க்கும் ஒரு மனிதர் சோ என்று விஷால் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சோ மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு என்று சொல்லலாம். சோ சார் தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு மனிதர்.
இப்போது இருக்கும் அரசியல் சூழலை, முன்பே 'துக்ளக்' படத்தில் வைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். நான் வியந்து பார்க்கும் ஒரு மனிதர் என்றால் சோ தான். இன்று அவர் நமது மத்தியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார் விஷால்.