

பழநி: ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் காட்டுப் பன்றிகள் அதிகம் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல், கொடைக்கானல் வனப் பகுதிகளில் வசிக்கும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் வளர்ப்புப் பன்றிகளுக்கும் இந்நோய் பரவாமல் தடுக்க பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடைத் துறையினர் தீவிர சோதனை செய்கின்றனர். அங்குபன்றி வளர்ப்பு, பராமரிப்பு, சுகாதாரம் குறித்து விசாரிக்கின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் திருவள்ளுவன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இந் நோய் பாதிப்பு இல்லை. பன்றிகள் மூலமாக இந்நோய் மனிதர்களுக்கோ, மற்ற விலங்குக ளுக்கோ பரவுவதில்லை என்றார்.