

கடலூர்: சிதம்பரத்தில் பழமை வாய்ந்த தில்லை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயிலில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றுஇந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன், கோயில் செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் 5 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 648, தங்கம் 19 கிராம், சில்வர் 40 கிராம், சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட் 65, ஓமன் நாட்டின் பணம் உள்ளிட்டவைகளை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இவைகள் வங்கி ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது.
இதற்கு முன் உண்டியல்கள் கடந்த நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டது. ஒன்றரை மாத இடைவெளியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இதுவாகும்.