சர்வதேச வேட்டி தினம்: கோ-ஆப்டெக்ஸில் 2 வேட்டிகள் வாங்கினால் 1 இலவசம்

சர்வதேச வேட்டி தினம்: கோ-ஆப்டெக்ஸில் 2 வேட்டிகள் வாங்கினால் 1 இலவசம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் 2 வேட்டிகள் வாங்கினால் ஒன்று இலவசமாக சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் வழங்கப்படுகிறது என கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பது: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டுசென்று தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும், கைத்தறியைநேசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும், நெசவாளர்களுக்கும் ஒரு பாலமாகவும் செயல்பட்டு வருகிறது.

சர்வதேச வேட்டிகள் தினத்தைமுன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ‘சர்வதேச வேட்டிகள் தினம்’ மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2 வேட்டிகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனை ஜன.15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாகவிற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

தஞ்சாவூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பொங்கலுக்கு ரூ.11 கோடிக்குவிற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், பொங்கல், சர்வதேச வேட்டிகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய பல்வேறு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட வேட்டி ரகங்கள், கலர் வேட்டிகள், ப்ரமாஸ் வேட்டிகள், ஐயப்பா வேட்டிகள், 8 முழம், 4 முழம் மற்றும்மாப்பிள்ளை செட் வேட்டிகள் ஏற்றுமதி ரகங்கள் போன்றவை ஏராளமாகத் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in