ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை எங்கே? - சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

இந்த ஆண்டு அழைப்பிதழ் (இடது); கடந்த ஆண்டு அழைப்பிதழ் (வலது)
இந்த ஆண்டு அழைப்பிதழ் (இடது); கடந்த ஆண்டு அழைப்பிதழ் (வலது)
Updated on
1 min read

மதுரை: தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது குறித்து மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது குறித்து மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் "2023ஆன் ஆண்டு ஜனவரி திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களும், திருமதி லட்சுமி ரவி அவர்களும் அன்புடன் அழைக்கிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அழைப்பிதழின் மேலே இந்திய அரசின் இலச்சினை அச்சிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in