கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு திமுக அரசு வேடிக்கை: அண்ணாமலை விமர்சனம்

கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு திமுக அரசு வேடிக்கை: அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: சட்டபேரவையில் ஆளுநர் உரையின்போது கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு திமுக அரசு வேடிக்கை பார்த்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் முன்புவரை, திமுக தலைவர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்க முகப்பில் ‘தலை நிமிருது தமிழகம், மனம் குளிருது தினம் தினம்’ என்ற வாசகம் இருந்தது. ஆனால் தற்போது அவசர அவசரமாக ‘தைத்திங்களில் தமிழர் பெருமை’ என்று வாசகம் மாற்றப்பட்டுள்ளது.

திமுக அரசு தன் குறைகளை மறைக்க, மக்களை திசைதிருப்ப இப்படி உணர்வுரீதியான பிரச்சினையை கிளப்புகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது, திமுக அரசால் எழுதி வழங்கப்பட்ட உரை. அதில்ஆளுநரின் சொந்த கருத்துகள் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும்கட்சியினரே ஆர்ப்பாட்டம் செய்தால், தங்கள் ஆட்சியை தாங்களே எதிர்ப்பதாக அமைந்து விடும் என்று, கூட்டணிக் கட்சியினரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது திமுக அரசு.

ஆளுநர் பேசிய பின்னர், மரபுக்கு புறம்பாகமுதல்வர் குறுக்கிட்டுப் பேசினார். கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநர் வெளியேற நேரிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in