

'வார்தா' புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன.
சாலைகள், தெருக்களில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள், காவல், தீயணைப்பு துறையினர், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதல் மரங்களை அப்பறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் தங்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே மாநகராட்சிப் பணியாளர்களுடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியிலும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான பணியில் ஈடுபடும் காவலர் ஒருவர் இங்கே...
படங்கள்:எல்.சீனிவாசன்