Published : 10 Jan 2023 06:51 AM
Last Updated : 10 Jan 2023 06:51 AM

பட்டியல் இன பணியிடங்களை 3 மாதத்துக்குள் நிரப்ப உத்தரவு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய விருந்தினர் மாளிகையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலர் டி.எஸ்.ஜவகர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் சுனில்குமார் பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அருண் ஹல்தார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆதிதிராவிடர் துறை சார்பில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் மொத்தம் 13 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில்10 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன. மீதமுள்ள வழக்குகள் மேல் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும்குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனிதக்கழிவா அல்லது விலங்குகளின் கழிவா என்பதைஉறுதி செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று தடயவியல் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக 11 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த விவகாரத்தின்போது சம்பவம் நடைபெற்ற இடத்தில், பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் குறித்து மொபைல் டவர் மூலமாக அதனுடைய விவரங்கள் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் ஆணையம் உறுதியாக இருக்கிறது.

தமிழகத்தில் அரசு பணிகளில் பட்டியல் இனத்தவருக்கான 10,402 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதில்அதிகபட்சமாக 6,841 பணியிடங்கள் ஆயத்தீர்வைத் துறை, உள்துறைஆகியவற்றிலும், 228 பணியிடங்கள் எரிசக்தித் துறையிலும் காலியாக உள்ளன. இவற்றை 3 மாதத்துக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x