தேசிய அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்

23-வது அகில இந்திய அளவில் போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் போட்டியை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்கவுள்ள பல்வேறு மாநில போலீஸார் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். படம்: எம்.முத்துகணேஷ்

Updated on
1 min read

சென்னை: தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். ‘23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி, நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியக மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. போட்டியை டிஜிபிசைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். பின்னர் பிற மாநில போலீஸார் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியதாவது:

போட்டியாளர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர். உங்களுடைய ஒத்துழைப்புதான் இந்த போட்டியின் மிகபெரிய வெற்றியாகும் என்றார்.

அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in