

தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண் டார்.
தமிழகத் தலைமைச் செயலாள ராக இருந்த பி.ராம மோகன ராவ் வீட்டில், கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத் தினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை பி.ராம மோகன ராவை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தலை மைச் செயலாளராக தமிழக பிரிவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். மேலும், ராம மோகன ராவ் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை காலை 9.20 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு கிரிஜா வைத்தியநாதன் வந்தார். தலை மைச் செயலாளர் அறையில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது அறையில், கிரிஜா வைத்தியநாதன் சந்தித்தார். 10 நிமிடம் முதல்வருடன் ஆலோ சனை நடத்தினார். தொடர்ந்து தன் அறைக்கு வந்த கிரிஜா வைத்திய நாதன் பணியை தொடர்ந்தார். அவரை பல்வேறு துறைகளின் செய லாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்தனர். பகல் 12 மணிக்கு, துறை செயலர்களுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, தலைமைச் செய லகத்தில் வெள்ளிக்கிழமை காலை அனைத்து வாயில்களிலும் போலீஸார் குவிக் கப்பட்டிருந்தனர். ஏற்கெனவே தலைமைச் செயலாளர் அலுவல கத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, அப்பகுதி யில் போலீஸார் நிறுத்தப்பட்டு, யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையும் அலுவலர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். நிருபர்கள், தலைமைச் செய லாளர் அறைக்கு செல்ல முற்பட்ட போது, போலீஸார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின், அங்கிருந்த அலுவலர்கள் தலைமைச் செயலாளர் தற்போது யாரையும் சந்திக்கவில்லை என தெரிவித்ததால், கலைந்து சென் றனர்.
தற்போது பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விரைவில் தமி ழகம் வரவுள்ள மத்திய குழுவை சந்தித்து ‘வார்தா’ புயல் நிவாரணம் தொடர்பாக பேச்சு நடத்துவார். அதன்பின், டிசம்பர் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் 27-வது தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் பங்கேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தின் 4-வது பெண் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுள் ளார். முன்னதாக, லட்சுமி பிரா னேஷ் (2002-03), எஸ்.மாலதி(2010-11), ஷீலா பாலகிருஷ்ணன் (2013-14) ஆகியோர் தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.
மரபை காத்த அரசு
தமிழக தலைமைச் செயலாள ராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் மூலம் தமிழக அரசு இந்த முறை ‘சீனியாரிட்டி’ மரபை காப் பாற்றியுள்ளது. கிரிஜா வைத்திய நாதன் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். 1981-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். ஏற்கெனவே இதே அதிமுக அரசில் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு 1982-ம் ஆண்டு அதிகாரியான ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அதன்பின், 1985-ம் ஆண்டு, அதிகாரியான பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், சீனியாரிட்டி மரபு மீறப்பட் டிருந்தது. ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பரிந் துரை என்பதால் சர்ச்சை எழவில்லை.
தற்போதும், தலைமைச் செய லாளர் பதவிக்கு, கிரிஜா வைத்திய நாதனுடன் 1985-ம் ஆண்டு பிரிவு அதிகாரிகளான நிதித்துறை செய லாளர் கே.சண்முகம், நெடுஞ் சாலைத்துறை செயலாளர் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் ஆகியோரது பெய ரும் அடிபட்டது. ஆனால், சீனியராக உள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரபு காக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.